ஆர்.டி.ஒ. அலுவலகத்தில் விஜிலென்ஸ் ரெய்டு
குமாரபாளையம் அருகே ஆர்.டி.ஒ. அலுவலகத்தில் விஜிலென்ஸ் ரெய்டு நடைபெற்றது.;
தமிழகம் முழுவதும் உள்ள ஆர்.டி.ஒ. அலுவலகங்கள் மற்றும் போக்குவரத்து சோதனை சாவடிகளில் திடீரென்று விஜிலென்ஸ் ரெய்டு நடைபெற்றது. இதன் ஒரு கட்டமாக குமாரபாளையம் அருகே உள்ள சில்லான்காடு ஆர்.டி.ஒ. அலுவலகத்தில் அதிகாரி நல்லம்மாள் தலைமையில் ரெய்டு நடைபெற்றது. காலை துவங்கிய ரெய்டு இரவு வரை நீடித்தது. இங்கு சத்யா மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.