பருவமழை சீசன்: ரேசன் கடைகளில் போதியளவு உணவுப்பொருள் இருப்பு

மழை தொடரும் சூழலில், குமாரபாளையம் தொகுதி ரேஷன் கடைகளில் போதியளவு இருப்பு உள்ளதாக, வட்ட வழங்கல் அலுவலர் சித்ரா தெரிவித்துள்ளார்.;

Update: 2021-11-12 13:00 GMT

வட்ட வழங்கல் அலுவலர் சித்ரா 

குமாரபாளையம் தொகுதியில் உள்ள அனைத்து ரேசன் கடைகளிலும்,  உணவுப்பொருட்கள் தீவிரமாக வினியோகம் செய்யப்பட்டு வருவதாக,  வட்ட வழங்கல் அலுவலர் சித்ரா தெரிவித்துள்ளார்.

இதுபற்றி சித்ரா கூறியதாவது: குமாரபாளையம் காவிரி கரையோரம்  வெள்ள பாதிப்பு பகுதிகளை,  ஆய்வு செய்ய வந்த மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மகேஸ்வரன்,  குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் பகுதியில் ரேசன் கடைகளில்  ஆய்வு செய்தார். நவம்பர் மாதத்திற்குரிய பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதா  என கேட்டறிந்தார்.

இதுவரை வினியோகம் செய்யப்பட்டது குறித்தும்,  பொதுமக்களிடம் விசாரித்து கேட்டறிந்தார். குமாரபாளையம் தாலுக்காவுக்கு உட்பட்ட குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில், 105 ரேசன் கடைகள் உள்ளன.  அனைத்து கடைகளிலும் உணவுப் பொருட்கள் போதியளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன. பருவமழை காலத்திலும், தாமதமில்லாமல் ரேசன் பொருட்கள் வினியோகம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News