குமாரபாளையத்தில் ரேஷன் அரிசி கடத்தல்? காவல்துறை விசாரணை
குமாரபாளையம் கத்தேரி பிரிவு சாலையில் ரேஷன் அரிசி கடத்தியதாக, அரிசி மூட்டைகள் மற்றும் வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.;
குமாரபாளையம் வட்டமலையில் ரேஷன் அரிசி கடத்தியதாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனம்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கத்தேரி பிரிவு சாலையில், மினி ஈச்சர் வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த குமராபாளையம் காவல்துறை அதிகாரிகள், வாகனத்தில் ரேசன் அரிசிகள் இருப்பதை உறுதி செய்தனர்.
இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட வாகனத்தின் ஓட்டுனரை கைது செய்து மேல் விசாரணையை காவல்துறையினர் முடுக்கி விட்டுள்ளனர். பட்டப்பகலில் பிரதான சாலையில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி கடத்தப்பட்ட சம்பவம், குமாரபாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.