குமாரபாளையத்தில் 110 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவர் கைது

குமாரபாளையத்தில் 110 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2022-06-09 12:15 GMT

குமாரபாளையத்தில் ரேஷன் அரிசி 110 கிலோ கடத்த முயன்ற தாமோதரன். 

குமாரபாளையம் கே.ஓ.என்.தியேட்டர் அருகே ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக டி.எஸ்.ஒ. வசந்திக்கு ரகசிய தகவல் கிடைத்து. அதன்பேரில் டி.எஸ்.ஒ. வசந்தி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது மாருதி ஆம்னி வேனின் அருகே ஒருவர் நின்று, ரேஷன் அரிசி மூட்டைகளை வாங்கி காரில் வைத்துக்கொண்டிருந்தார். விசாரனையில் பவானி, குருப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த தாமோதரன், 45, என்பது தெரியவந்தது.

இவர் மீது வழக்குப்பதிவு செய்து உணவுப்பொருள் பாதுகாப்புத் துறை, குற்றப்புலனாய்வு துறை எஸ்.ஐ. அகிலனிடம் 50 கிலோ எடை கொண்ட 55 அரிசி மூட்டைகளுடன் தமோதரன் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Tags:    

Similar News