ராசிபுரத்தில் தமிழக அரசை கண்டித்து பா.ஜ.க. சார்பில் உண்ணாவிரதம்
தமிழக அரசை கண்டித்து பா.ஜ.க. சார்பில் ராசிபுரத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.;
தமிழக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டிப்பதாக கூறி நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மாவட்ட பா.ஜ.க. சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. மாநில துணை தலைவர் துரைசாமி, உள்ளிட்ட அனைத்து பகுதி நிர்வாகிகள் பங்கேற்றனர். குமாரபாளையம் பகுதியை சேர்ந்த கல்வியாளர் பிரிவு மாவட்ட தலைவர் கண்ணன், அரசு தொடர்பு துறை பிரிவு மாவட்ட தலைவர் சரவணராஜன், மாவட்ட நிர்வாகி சுகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.