குமாரபாளையத்தில் ராமநவமி உற்சவ ராமர் திருக்கல்யாண வைபோகம்

குமாரபாளையத்தில் ராமநவமி உற்சவத்தையொட்டி ராமர் திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றது.;

Update: 2022-04-22 00:07 GMT

குமாரபாளையத்தில் ராமநவமி உற்சவத்தையொட்டி, ராமர் கோவிலில் ராமர், சீதா திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றது.

குமாரபாளையத்தில் ராமநவமி உற்சவத்தையொட்டி ராமர் திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றது.

ராமநவமி விழா ஏப். 10ல் நடைபெற்றது. இதையொட்டி குமாரபாளையம் ராமர் கோவிலில் ஏப். 11 முதல் தினமும் உற்சவ பூஜைகள், கட்டளைதாரர் பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஒரு கட்டமாக ராமர், சீதா தேவியின் திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் பெருமளவில் பங்கேற்று பஜனை பாடல்கள் பாடினார்கள். குழந்தைகளுக்கு ராமர், சீதா, லட்சுமணர், விஸ்வாமித்திரர் வேடங்கள் போட்டவாறு கோவில் வளாகத்தில் அருள்பாலித்தனர்.

Tags:    

Similar News