குமாரபாளையம் ராமர், பெருமாள் கோவில்களில் ராமநவமி விழா

குமாரபாளையம் ராமர், பெருமாள் கோவில்களில் ராமநவமி விழா கொண்டாடப்பட்டது.;

Update: 2022-04-10 14:30 GMT

ராமநவமி நாளையொட்டி குமாரபாளையம் விட்டலபுரி ராமர் கோவிலில் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.

ராமநவமி நாளையொட்டி, குமாரபாளையம் திருவள்ளுவர் நகர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றன.

அதேபோல் குமாரபாளையம் அக்ரஹாரம் லட்சுமி நாராயண சுவாமி கோவில், விட்டலபுரி பாண்டுரங்கர் கோவில், ராமர் கோவில், ஜெய்ஹிந்த் நகர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத புருஷோத்தம பெருமாள் கோவில், கோட்டைமேடு ஸ்ரீதேவி, பூதேவி சமேத தாமோதரசுவாமி கோவில், கள்ளிப்பாளையம் பெருமாள் கோவில் உள்ளிட்ட பல பெருமாள் கோவில்களில் சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News