குமாரபாளையம் மசூதியில் ரம்ஜான் தொழுகை, நகர்வலம்
குமாரபாளையம் மசூதியில் ரம்ஜான் தொழுகை நடைபெற்று நகர்வலம் நடைபெற்றது.;
குமாரபாளையம் கலைமகள் வீதியில் உள்ள மசூதியில் ரம்ஜான் விழாவையொட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது. தலைமை இமாம் மவுலான அஸ்ரப் அலி மிஸ்பாகி மற்றும் தலைவர் ஜமாலுதீன் தலைமையில் ஜமாத்காரர்கள் ஒன்று கூடி ரமலான் சிறப்பு தொழுகை நிறைவேற்றினர்.
தொழுகைக்கு பின் அனைவரும் முக்கிய வீதிகளின் வழியாக நகர்வலம் வந்தனர். நகர்வலத்தில் அனைத்து மதத்தினரும் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொண்டனர்.