மாநிலங்களவை எம்.பி.,யாக ராஜேஷ்குமார் தேர்வு: குமாரபாளையம் தி.மு.க.வினர் வாழ்த்து

மாநிலங்களவை எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்ட ராஜேஷ்குமாருக்கு குமாரபாளையம் நகர நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.;

Update: 2021-09-24 11:00 GMT

மாநிலங்களவை தி.மு.க. எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட நாமக்கல் கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளருக்கு குமாரபாளையம் நகர நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

மாநிலங்களவை எம்.பி.,யாக நாமக்கல் கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் சென்னை சென்று தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் மூத்த நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து பெற்று வந்தார்.

இந்நிலையில் இவருக்கு மாவட்டத்திலிருந்து பெருமளவிலான தி.மு.க.வினர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். குமாரபாளையம் நகர தி.மு.க. சார்பில் நகர பொறுப்பாளர் செல்வம் தலைமையில் மாநிலங்களவை தி.மு.க. எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட நாமக்கல் கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் ராஜேஷ்குமாருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தனுக்கும் பொன்னாடை அணிவிக்கப்பட்டது. இவருடன் நிர்வாகிகள் அன்பரசு, அன்பழகன், ராஜ்குமார், விஸ்வநாதன் உள்பட பலர் பங்கேற்று இருவருக்கும் பொன்னாடை அணிவித்தனர்.

Tags:    

Similar News