ராஜீவ்காந்தி நினைவு நாள் அனுஸ்டிப்பு

குமாரபாளையம் காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜீவ்காந்தி நினைவு நாள் அனுஸ்டிக்கப்பட்டது.;

Update: 2025-05-21 16:00 GMT

 ராஜீவ்காந்தி நினைவு நாள்

அனுஸ்டிப்பு

குமாரபாளையம் காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜீவ்காந்தி நினைவு நாள் அனுஸ்டிக்கப்பட்டது.

குமாரபாளையம் நகர காங்கிரஸ் கட்சி சார்பாக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாள், நகர தலைவர் ஜானகிராமன் தலைமையில் அனுஷ்டிக்கப்பட்டது. பள்ளிபாளையம் பிரிவு சாலையில், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராஜீவ்காந்தியின் திருவுருவப்படத்திற்கு, மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டது. ராஜீவ்காந்தி ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், சேவைகள் குறித்து அனைவரும் நினைவு கூர்ந்தனர். இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. துணை தலைவர் சிவகுமார், சுப்பிரமணி, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கோகுல்நாத், தங்கராஜ், நகர பொருளாளர் சிவராஜ், நகர செயலர் தாமோதரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

படவிளக்கம் : 

குமாரபாளையம் காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜீவ்காந்தி நினைவுநாள் அனுஷ்டிக்கப் பட்டது.

-

--

Similar News