ராஜ விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா ..!
குமாரபாளையத்தில் உடையார் பேட்டை ராஜ விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது.
குமாரபாளையத்தில் உடையார் பேட்டை ராஜ விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது.
குமாரபாளையம் உடையார்பேட்டை ராஜ விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா ஜன.18ல் கிராமசாந்தி பூஜையுடன் துவங்கியது. கணபதி யாக பூஜை புண்யாக வாசனம் உள்ளிட்ட பூஜைகளும், பவானி கூடுதுறை ஆற்றிலிருந்து தீர்த்தக்குட ஊர்வலமும், முளைப்பாரி ஊர்வலமும் நடந்தது. கோவில் வளாகத்தில் உள்ள திருநீலகண்டர் நாயனார், பாலசுப்ரமணியர், துர்க்கை அம்மன், தட்சிணாமூர்த்தி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
நேற்று காலை 09:45 மணிக்கு, கும்பாபிஷேக விழாவையொட்டி, சிவாச்சாரியார்களால் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. யாகசாலை பூஜை மற்றும் கும்பாபிஷேக பூஜைகளை பவானி பாலாஜி சிவம் மற்றும் குழுவினர் நடத்தி வருகின்றனர். நிர்வாகிகள் சரவணன், செந்தில்குமார், சக்திவேல், கார்த்திகேயன் உள்பட பலர் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். கும்பாபிஷேக விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
கும்பாபிஷேக விழாவையடுத்து தினசரி மண்டல பூஜைகள் நடந்து வருகிறது. இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கோவில் நிர்வாகத்தினர் வசம் பெயரி பதிவு செய்து கொல்லவ வேண்டி விழாக்குழு சார்பில் கேட்டுக்கொள்கிறார்கள்.