குமாரபாளையத்தில் மழை நீர் வடிகால், புதிய தார் சாலை அமைக்க பூமி பூஜை

குமாரபாளையத்தில் மழை நீர் வடிகால், புதிய தார் சாலை அமைக்க பூமி பூஜை போடப்பட்டது.;

Update: 2023-05-10 12:00 GMT

குமாரபாளையத்தில் புதிய தார்சாலை மழைநீர் வடிகால் கட்டுவதற்கு பூமி பூஜை போடப்பட்டது.

குமாரபாளையத்தில் மழை நீர் வடிகால் புதிய தார் சாலைஅமைக்க பூமி பூஜை நடந்தது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி அம்மன் நகர் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி மழை நீர் வடிகால் அமைத்து புதிய தார் சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை விடுத்து வந்தனர். பலரின் ஆக்கிரமிப்புகள் காரணமாகவும், சாலை அமைக்க இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் பலர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டதாலும், இந்த சாலை போட முடியாமல் போனது.

இந்நிலையில் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் முயற்சியின் பேரில், மாவட்ட தி.மு.க. செயலாளர் மதுரா செந்தில் ஆதரவுடன், நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் நேரு ஒப்புதலின் பேரில், விருப்ப நிதியாக 1. 83 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இந்த சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது. இந்த சாலை அமைய பாடுபட்ட அம்மன் நகர் குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் கவுரவப்படுத்தப்பட்டனர். மாவட்ட தி.மு.க. செயலாளர் மதுரா செந்தில் பங்கேற்று பணிகளை துவக்கி வைத்தார். நகராட்சி ஆணையர் (பொ) ராஜேந்திரன், நிர்வாகிகள் செல்வராஜ், செந்தில்குமார், கவுன்சிலர் தர்மராஜ், ஐயப்பன், ரவி உள்பட பலர் பங்கேற்றனர்.

குமாரபாளையம் தம்மண்ணன் சாலையில் கழிவுநீர் கோம்பு பள்ளத்தில் உயர்மட்ட பாலம் பல மாதங்களாக கட்டப்பட்டு வந்தது. மிக முக்கியமான சாலையில் பல மாதங்களாக பாலம் கட்டப்பட்டு வருவதால், வாகன ஓட்டிகள் பள்ளிபாளையம் சாலை வழியாக சுமார் 3 கி.மீ. தூரம் சுற்றி சென்று கொண்டிருந்தனர். இதனால் கால விரயம், பண விரயம் ஏற்பட்டது. அதனை பொதுமக்கள் பொறுத்துக்கொண்டு சென்று வந்தனர். சில நாட்கள் முன்பு வாகனங்கள் அனுமதிக்கப்பட்டதால் இந்த பாதையில் டூவீலர்கள், கார்கள் சென்று வந்தன. தற்போது பாலம் கட்டுமான பணி நிறைவு பெற்று, பாலத்தின் பக்கவாட்டு சிவர் பெயிண்டிங் பணிகள் துவங்கி நடந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Tags:    

Similar News