குமாரபாளையத்தில் ராகுல்காந்தி பிறந்த நாள்: காங்கிரஸார் கொண்டாட்டம்

Rahul Gandhi birthday at Kumarapalayam Congress celebration

Update: 2022-06-19 10:15 GMT

குமாரபாளையத்தில் ராகுல்காந்தி பிறந்த நாள் விழாவையொட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் காளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

ராகுல்காந்தி பிறந்த நாள் விழா குமாரபாளையம் காங்கிரஸ் கட்சி சார்பில் கொண்டாடப்பட்டது.

குமாரபாளையம் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல்காந்தி பிறந்த நாள் விழா நகர துணை தலைவர் சிவகுமார் தலைமையில் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. சோனியாகாந்தி மற்றும் ராகுல்காந்தி பெயரில் அர்ச்சனைகள் செய்யப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சாமிநாதன், துணை தலைவர் சக்திவேல், மாவட்ட பொது செயலர் மனோகரன், மாவட்ட செயலர் கோகுல்ராஜ், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் ஆதிகேசவன், மாவட்ட பிரதிநிதி மாரிமுத்து, நகர, மாவட்ட, மகளிரணி நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.



Tags:    

Similar News