ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
குமாரபாளையம் ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.;
குமாரபாளையம் ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது
குமாரபாளையம் ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி முதல்வர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது. மாணவ, மாணவியர் தங்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இந்த சந்திப்பு 20 ஆண்டுகள் கழித்து நடைபெற்றதால் மிகவும் உணர்ச்சிமயமாக இருந்தது.
உங்களை எல்லாம் கண்டித்து படிக்க வைத்தோம், எனும் போது முதல்வர் கண் கலங்கினார். இதனை கண்ட மாணவர்களும் கண் கலங்கினர். இந்த சந்திப்பின் நினைவாக 25 மரக்கன்றுகள் கல்லூரி வளாகத்தில் நடப்பட்டது. அனைத்து துறை மாணவர்களும் இதில் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர் சங்கமேஸ்வரன் செய்திருந்தார்.