வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து தீர்ப்புக்கு புதிய திராவிட கழகம் வரவேற்பு
வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து செய்த தீர்ப்பை, குமாரபாளையம் பகுதி புதிய திராவிட கழகத்தினர் வரவேற்றுள்ளனர்;
வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து தீர்ப்பை வரவேற்று, புதிய திராவிட கழகத்தினர் சார்பில் குமாரபாளையம் அருகே கல்லங்காட்டுவலசு பஸ் நிறுத்தம் அருகே இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை, எம்பிசி உள் இடஒதுக்கீட்டில் 10.5 சதவீதம் வழங்கியதை ரத்து செய்தது. இதை, குமாரபாளையம் பகுதி புதிய திராவிட கழகத்தினர் வரவேற்றுள்ளனர்.
மேலும், அந்த அமைப்பினர் சார்பில் ஒன்றிய நிர்வாகிகள் விஸ்வநாதன், மோகன் உள்ளிட்ட பலர், குமாரபாளையம் அருகே கல்லங்காட்டுவலசு பஸ் நிறுத்தம் அருகே பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.