பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு..!
குமாரபாளையம் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
குமாரபாளையம் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
புரட்டாசி சனிக்கிழமை நாளையொட்டி குமாரபாளையம் விட்டலபுரி, பாண்டுரங்கர் கோவிலில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தன. பக்தி பாடல்கள் நிகழ்ச்சி நடந்தது. இதே போல் அக்ரஹாரம் லட்சுமி நாராயண சுவாமி கோவில், திருவள்ளுவர் நகர் சவுந்திரராஜ பெருமாள் கோயில், விட்டலபுரி ராமர் கோவில், கோட்டைமேடு தாமோதர பெருமாள் கோவில், தட்டான்குட்டை ஜெய்ஹிந்த் நகர் புருஷோத்தம பெருமாள் கோவில், கள்ளிப்பாளையம் பெருமாள் கோவில் உள்ளிட்ட பல பெருமாள் கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.
புரட்டாசி மாதம் சிறப்பானது என்றாலும், இதில் வரும் அனைத்து சனிக்கிழமைகள் மிக அற்புதமானவை. புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் இருந்து, பெருமாளை வழிபட முடியாவிட்டாலும், புரட்டாசியில் வரும் சனிக்கிழமைகளில் மட்டுமாவது விரதம் இருந்து பெருமாளை வழிபட வேண்டும்.
இதனால் புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் இருந்த பலன் கிடைக்கும். அதோடு புரட்டாசி சனிக்கிழமையில் விரதம் இருந்து, பெருமாளை பக்தியுடன் வழிபடுபவர்களுக்கு சனியினால் ஏற்படும் தோஷங்கள் மட்டுமின்றி, எப்படிப்பட்ட கிரக தோஷங்கள் இருந்தாலும் அது நீங்கி விடும்.