விபத்து அபாயத்தில் பொதுமக்கள், போக்குவரத்து போலீசார் நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை

குமாரபாளையம் அருகே விபத்து அபாயம் போக்கிட போக்குவத்து போலீசார் நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2025-04-19 12:05 GMT

விபத்து அபாயத்தில் பொதுமக்கள், போக்குவரத்து போலீசார் நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை


குமாரபாளையம் அருகே விபத்து அபாயம் போக்கிட போக்குவத்து போலீசார் நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குமாரபாளையம் அருகே சேலம் கோவை புறவழிச்சாலை, கத்தேரி பிரிவு பகுதியில் மேம்பால கட்டுமான பணிகள் முடியும் நிலையில் உள்ளது. பாலத்தின் மேலே உள்ள சாலையில், புதிய தார் சாலை பணிகள் தீவிரமாக நடந்து வருவதால், இரு புறமும் உள்ள சர்வீஸ் சாலையில், வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. மேம்பாலம் கீழ் பகுதியில் நுழைந்து வரும், அதிக அளவிலான வாகனங்கள் இரு சர்வீஸ் சாலைகளை கடந்து சென்று வருகின்றன. சர்வீஸ் சாலையில், வேகத்தடை இல்லை. இரு புறமும் அதிக வாகனங்கள் மிக வேகமாக வருவதால், பலரும், பல வாகனங்களில் சிக்கி விபத்துக்கு ஆளாகி வருகிறார்கள். சர்வீஸ் சாலையில் இரு புறமும் வேகத்தடை அமைக்க வேண்டும். அப்போதுதான், வாகனங்கள் வேகத்தை குறைத்து வருவார்கள். விபத்துக்கள் குறையும் வாய்ப்பு ஏற்படும். மேலும், புறவழிச்சாலைக்காக நியமிக்கப்பட்ட போக்குவரத்து போலீசார், ஒருவர் கூட இந்த கத்தேரி பிரிவு பகுதியில் நின்று, போக்குவரத்து சரி செய்வது இல்லை. வாகன சோதனை சென்ற பெயரில், போக்குவரத்து போலீசார், புறவழிச்சாலையில் உள்ள, போலீஸ் ஸ்டேஷன் அருகில் நின்று, வாகன சோதனை சென்ற பெயரில் ஒன்று கூடி உள்ளனர். இவர்களை யார் கட்டுப்படுத்துவது? மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் எஸ்.பி. ஆகியோர், போக்குவரத்து போலீசாரை, கத்தேரி பிரிவில் நின்று, போக்குவரத்து சீர்படுத்தவும், விபத்துக்களில் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்கவும், இரு புறமும் உள்ள சர்வீஸ் சாலையில், மேம்பாலம் கீழ் பகுதியில், வேகத்தடை அமைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

படவிளக்கம் :

குமாரபாளையம் அருகே சேலம் கோவை புறவழிச்சாலை, கத்தேரி பிரிவு பகுதியில், போக்குவத்து போலீசார் நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Similar News