குமாரபாளையம்: பகலில் பூட்டப்படும் பொதுக் கழிப்பிடம்
குமாரபாளையம்பேருந்து நிலைய பொதுக்கழிப்பிடம் பகலில் பூட்டப்படுதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்;
குமாரபாளையம் நகராட்சி சார்பில் பேருந்து நிலைய வளாகத்தில் பொதுக்கழிப்பிடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிப்பிடத்தை தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள், சுற்றுலா கார்கள், வேன்கள், டெம்போ ஓட்டுனர்கள், பயணிகள், பஸ் ஸ்டாண்ட் கடை வியாபாரிகள், அக்கம் பக்கம் உள்ள பொதுமக்கள் என பலரும் பயன்படுத்தி வருகிறார்கள்
இந்நிலையில் இந்த கழிப்பறை அடிக்கடி பூட்டப்படுவதால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகின்றனர். இதே வளாகத்தில் ரோட்டரி கிளப் சார்பில் அமைக்கப்பட்ட பொதுக்கழிப்பிடம் உள்ளது. இதில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் கூறப்படுகிறது. நகராட்சி நிர்வாகத்தினர் இதனை பரிசீலித்து இரு கழிப்பிடங்களும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.