கஞ்சா, மது விற்பதை தட்டி கேட்டவருக்கு அடி, உதை, பொதுமக்கள் சாலை மறியல்

குமாரபாளையத்தில் கஞ்சா, மது விற்பதை தட்டி கேட்டவருக்கு அடி, உதை விழுந்தது, இதனால் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.;

Update: 2021-09-12 13:00 GMT

குமாரபாளையத்தில் கஞ்சா, மது விற்பதை தட்டி கேட்டவருக்கு அடி, உதை விழுந்ததால் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். (காவேரி நகர், குமாரபாளையம் )

குமாரபாளையம் காவேரி நகர் காந்தியடிகள் தெருவில் காவேரி ஆற்றங்கரை பகுதியை சேர்ந்த செல்வம், அப்பு, குமார் உள்ளிட்ட பலர் பள்ளி மாணவர்களை வைத்து மது, கஞ்சா விற்பனை செய்வதாக கூறப்படுகிறது.

இதே நபர்கள் அப்பகுதியை சேர்ந்த பெண்களை ஆபாச வார்த்தையால் திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனை அப்பகுதியை சேர்ந்த ராஜா, 40, என்ற கூலி தொழிலாளி தட்டி கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், ராஜாவை வீட்டுக்குள் புகுந்து கைகளாலும், கட்டையலும் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனை கண்டித்து அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் காவேரி நகர், புதிய காவேரி பாலம் பிரிவு சாலையில் நேற்று மாலை 04:00 மணியளவில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்த குமாரபாளையம் போலீசார் நேரில் வந்து, தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் மீதி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறியதின் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News