குமாரபாளையத்தில் பொது வேலைநிறுத்தம் குறித்து மக்கள் சந்திப்பு இயக்கம்

குமாரபாளையத்தில் பொது வேலைநிறுத்தம் குறித்து மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது.;

Update: 2022-03-22 15:15 GMT

குமாரபாளையத்தில் நடைபெறவுள்ள பொது வேலைநிறுத்தம் குறித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு இயக்கம் பிரச்சார கூட்டத்தில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டன.

மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத கொள்கைகளை கைவிட வலியுறுத்தி தேசிய அளவிலான வேலை நிறுத்தம், மறியல் மார்ச் 28ல், குமாரபாளையம், பள்ளிபாளையம் பிரிவு சாலையில் காலை 10:00 மணிக்கு நடைபெறவுள்ளது.

பெட்ரோல், டீசல், கேஸ் விலையை குறைக்க வேண்டும். வேலைவாய்ப்பை உருவாக்கி, வேலையில்லா திண்டாட்டத்தை தவிர்க்க வேண்டும், வேலை பாதுகாப்பை உறுதி செய்யாத முதலாளிகளுக்கு உதவும் நடவடிக்கைகள், சலுகைகள், ஊக்கத்திட்டங்கள் நிறுத்தப்படவேண்டும், மத்திய, மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனையை நிறுத்த வேண்டும், அனைத்து தரப்பு தொழிலாளர்களுக்கு மாதம் 3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும், என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்படவுள்ளன.

இந்தபோராட்டத்தை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் மக்கள் சந்திப்பு இயக்கம் ஏ.ஐ.டி.யூ.சி. நிர்வாகி பாலசுப்ரமணி தலைமையில் நேற்று நாள் முழுதும் பல இடங்களில் நடைபெற்றது. இது குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன. இதில் சி.ஐ.டி.யூ, எச்.எம்.எஸ், ஏ.ஐ.சி.சி.டி.யூ, உள்பட அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் பாலுசாமி, நஞ்சப்பன், செல்வராஜ், சரவணன், அருள் ஆறுமுகம், பஞ்சாலை சண்முகம் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News