பொதுமக்களுக்கு இடையூறு பேனர் போலீசார் வழக்குப்பதிவு

குமாரபாளையம் அருகே பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக பிளெக்ஸ் பேனர் வைத்ததாக குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.;

Update: 2025-04-27 13:05 GMT

பொதுமக்களுக்கு இடையூறு பேனர்

போலீசார் வழக்குப்பதிவு


குமாரபாளையம் அருகே பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக பிளெக்ஸ் பேனர் வைத்ததாக குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பிளெக்ஸ் வைக்க கூடாது என, சில நாட்கள் முன்புதான், குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனில், பிளெக்ஸ் நிறுவன உரிமையாளர்கள், அரசியல் கட்சியினர், வியாபார நிறுவனத்தார் ஆகியோர்களுக்கு ஆலோசனை கூட்டம் நடத்தி, இன்ஸ்பெக்டர் தவமணி அறிவுறுத்தினார். நேற்றுமுன்தினம் காலை 10:00 மணியளவில், குமாரபாளையம் அருகே, வேமன்காட்டுவலசு பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், தண்டபாணி நகர் என்ற பெயரில் பிளெக்ஸ் வைத்ததாக, சக்திவேல், 58, என்பவர் மீது, எஸ்.ஐ. தங்கவடிவேல் புகாரின் பேரில், குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது குறித்து சம்பந்தப்பட்ட நபரிடம் விசாரணை செய்து வருகிறார்கள்.

Similar News