குமாரபாளையத்தில் மேம்பால பகுதியில் வேகத்தடை அமைக்க கோரிக்கை
குமாரபாளையத்தில் மேம்பாலம் பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்;
குமாரபாளையம் சேலம் கோவை புறவழிச்சாலை கோட்டைமேடு பகுதியில் அதிக விபத்துக்கள் ஏற்பட்டு, அதிக உயரிழப்புகள் ஏற்பட்டதால்தான் பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று மேம்பாலம் அமைக்கப்பட்டது. இப்போது இந்த இடத்தில் இரு புறமும் உள்ள சர்வீஸ் சாலையில் வேகத்தடை இல்லாததால் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்கள் ஏற்பட்டு பலரும் பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள்.
மேம்பாலம் அமைத்தும் சர்வீஸ் சாலைகளில் வேகத்தடை அமைக்காததால் விபத்துகள் தொடர்ந்து வருகிறது. இங்கு எச்சரிக்கை விளக்கு அமைக்கப்பட்டிருந்தாலும் , பகலில் இது பலருக்கு தெரிவதில்லை.
எனவே அங்கு வேகத்தடை அமைப்பதுதான் பயனளிக்கும். எனவே இங்கு அசம்பாவிதம் ஏற்படும் முன் மேலும் காலம் கடத்தாமல் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.