குமாரபாளையம் புறவழிச்சாலையை உடனே சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

குமாரபாளையத்தில் புறவழிச்சாலை சாலை பழுதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதனை உடனே சீரமைக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.;

Update: 2023-06-09 15:29 GMT
குமாரபாளையம் புறவழிச்சாலை சேதம் அடைந்துள்ள காட்சி.

குமாரபாளையத்தில் புறவழிச்சாலை சாலை பழுதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனை உடனே சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

குமாரபாளையம் அருகே சேலம் கோவை புறவழிச்சாலை உள்ளது. இதன் கத்தேரி பஸ் நிறுத்தம் பகுதியில் சாலைகள் மிகவும் சேதமாகி கற்கள் பெயர்ந்தன. இதனால் வாகனங்கள் வேகமாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பழுதான சாலை பகுதி வரை டிவைடர்கள் வைக்கப்பட்டு, சாலை இரண்டாக பிரிக்கப்பட்டது. வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மெதுவாக செல்லும் நிலை ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் வரிசையில் நின்று செல்லும் நிலை ஏற்பட்டதால், வாகன ஓட்டிகள் அதிருப்தியடைந்தனர்.

இது பற்றி இப்பகுதி மக்கள் கூறியதாவது:-

இதே பகுதியில் ஏற்கனவே இந்த சாலை பழுதாகி பின்னர்  சீர் படுத்தப்பட்டது. ஆனால், சரிவர சாலை அமைக்காததால், கற்கள் பெயர்ந்து, போக்குவரத்திற்கு பயன்படாத வகையில், சாலையில் மீண்டும்  பள்ளங்கள் ஏற்பட்டன. புறவழிச்சாலையில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வாகனங்கள் இரவு பகலாக சென்று கொண்டுள்ளன. இந்த சாலை பராமரிப்பு செய்யும் போதே தரமுள்ளதாக அமைக்க வேண்டும். கடமைக்காக சாலை அமைத்ததால்தான் இந்த சாலை குறுகிய நாட்களில் மீண்டும் பழுதானது. ஏற்கனவே சாலை பழுதினை சரி செய்த ஒப்பந்ததாரர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சாலை பழுதால் விபத்து அபாயமும் ஏற்பட்டு, பலரும் பாதிக்கும் நிலை உருவாகும். எனவே இனி அமைக்கும்போது சாலையை தரமாக சீரமைக்க வேண்டும் என்பதே அனைவரின்  எதிபார்ப்பாகும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

Similar News