திடக்கழிவு மேலாண்மை குறித்த மத்திய அரசு சான்றுக்கு பொதுமக்களிடம் கருத்து கேட்பு

குமாரபாளையம் நகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை குறித்த மத்திய அரசு சான்றிதழ் பெற பொதுமக்களிடம் கருத்து கேட்பு நடத்தவுள்ளதாக கமிஷனர் தெரிவித்துள்ளார்.;

Update: 2022-02-26 03:45 GMT

குமாரபாளையம் நகராட்சி அலுவலகம்.

குமாரபாளையம் நகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை குறித்த மத்திய அரசு சான்றிதழ் பெற பொதுமக்களிடம் கருத்து கேட்பு நடத்தப்பட கமிஷனர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இது பற்றி நகராட்சி கமிஷனர் சசிகலா தமது அறிக்கையில், குமாரபாளையம் நகராட்சி, தூய்மை இந்தியா திட்டம், திடக்கழிவு மேலாண்மை திட்ட விதிகளின் செயல்பாடுகளின் அடிப்படையில், மத்திய அரசின் எம்.ஒ.யூ.டி. துறையினர் 3 நட்சத்திர அந்தஸ்து ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அங்கீகாரம் வழங்கி வருகின்றனர்.

அதில் ஒரு பகுதியாக குமாரபாளையம் நகராட்சியில் சேகரமாகும் திடக்கழிவுகளை திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி தரம் பிரித்து கையாளப்பட்டு வருகிறது. இரண்டாம் நிலை சேகரம் செய்வது முற்றிலும் தவிர்க்கப்படுகிறது. குமாரபாளையம் நகரட்சியினை குப்பையில்லா நகராட்சியாக மத்திய அரசால் வழங்கப்படும் மூன்று நட்சத்திர சான்றிதழ் பெற சுய உறுதி சான்றிதழுக்கு நகர்மன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பொதுமக்கள் தங்களின் ஆட்சேபனைகள் மற்றும் கருத்துக்களை குமாரபாளையம் நகராட்சி கமிஷனருக்கு எழுத்து வாயிலாக 15 தினங்களுக்குள் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அவர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News