அரசு கலைக்கல்லூரியில் பி.டி.ஏ. பொதுக்குழு கூட்டம்..!
குமாரபாளையம் அரசு கலைக்கல்லூரியில் பி.டி.ஏ. சார்பில் பொதுக்குழு கூட்டம் நடந்தது.;
குமாரபாளையம் அரசு கலைக்கல்லூரியில் பி.டி.ஏ. சார்பில் பொதுக்குழு கூட்டம் நடந்தது.
குமாரபாளையம் அரசு கலைக்கல்லூரியில் பி.டி.ஏ. சார்பில் கல்லூரி முதல்வர் ரேணுகா தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடந்தது. நிதி நிலை அறிக்கையை பேராசிரியர் கோவிந்தராஜ் சமர்பித்தார். இதில் கல்லூரி வளர்ச்சிக்கு செய்ய வேண்டிய பணிகள் செய்வது, மாணவர் நலன்கள் குறித்து நடவடிக்கை மேற்கொள்வது போன்ற நவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு எடுக்கப்பட்டது.
மேலும் கல்லூரி வளாகத்தில் குடிநீர் வசதி உள்ளிட்ட அத்தியாவசிய பணிகள் மேம்படுத்துதல், மாணவர்களை அதிக எண்ணிகையில் சேர்த்திட தமிழக அரசின் உத்திரவுப்படி, அருகாமையில் உள்ள அரசு பள்ளி மாணாக்கர்களை நேரில் அழைத்து வந்து, கல்லூரியில் உள்ள ஆய்வகம், நூலகம் உள்ளிட்ட அனைத்து வசதிகள் குறித்து எடுத்துரைப்பது, கருத்தரங்கங்கள் நடத்தி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
நாட்டு நலப்பணி திட்டம் மூலம் சமூக சேவைகளை மேம்படுத்துதல், விளையாட்டு பயிற்சிகள் வழங்கி, மாணவர்களின் வெற்றி வாய்ப்பை உருவாக்குதல் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பி.டி.ஏ. சார்பில் மூன்று பேராசிரியர்கள், நூலகர் ஆகிய நால்வர் நியமிக்கப்பட்டு மாணக்கர்கள் நலனில் அதிக கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இதில் பி.டி.ஏ.செயலர் செல்வராஜ், இணை செயலர் கோமதி, பேராசிரியர் ரகுபதி உள்பட பேராசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.