பள்ளிபாளையத்தில் 167 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
பள்ளிபாளையத்தில் 167 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை டி.ஆர்.ஒ. வழங்கினார்.;
பள்ளிபாளையம் அருகே பாப்பம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் டி.ஆர்.ஓ. மல்லிகா பங்கேற்று 167 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பள்ளிபாளையம் அருகே பாப்பம்பாளையம் பகுதி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் திருச்செங்கோடு ஆர்.டி.ஒ. இளவரசி தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற டி.ஆர்.ஓ. மல்லிகா பங்கேற்று 167 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா, ஒ.ஏ.பி, ரேசன் கார்டு உள்ளிட்ட ஒரு கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பாப்பம்பாளையம், ஒடப்பள்ளி, கொக்கராயன்பேட்டை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெற்றார். இதில் அட்மா சேர்மன் யுவராஜ், ஆர்.ஐ. கார்த்திகா, வேளாண்மை, தோட்டக்கலை, சமூக நலம், சுகாதாரத்துறை, கால்நடைத்துறை, வேலைவாய்ப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.