கொரோனா கால நிவாரணமாக ரூ 7,500 வழங்க சிஐடியு தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்

கொரோனா கால நிவாரண தொகையாக ரூ.7,500 வழங்கவேண்டும் என்று சி.ஐ.டி .யூ தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update: 2021-06-11 09:15 GMT

கொரோனா கால நிவாரண தொகையாக ரூ.7,500 வழங்கவேண்டும் என்று சி.ஐ.டி .யூ தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும்; கொரோனா கால நிவாரணம் ₹7500 ஆர்டிஓ அலுவலகம் மூலம் வழங்க வேண்டும்; எப்சி இன்சூரன்ஸ் போன்ற ஆர்டிஓ அலுவலகப் பணிகளை ஓராண்டு காலம் நீட்டிப்பு செய்ய வேண்டும்; நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட வாகன கடன்கள் அனைத்திற்கும் இஎம்ஐ வசூல் செய்யும் காலத்தை ஆறு மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் குமாரபாளையம்- பள்ளிபாளையம் சாலையில் உள்ள அம்மா சூப்பர் மார்க்கெட் பகுதி அருகே கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.


ஆர்ப்பாட்டத்தின் முடிவில் குமாரபாளையம் வட்டாட்சியர்,  காவல் ஆய்வாளர் ஆகியோரிடம்   நேரிலும்  தமிழக அரசுக்கு ஆன்லைனிலும் கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிஐடியு மாவட்ட குழு உறுப்பினர் ழர் பாலுச்சாமி, பஞ்சாலை சண்முகம், சாலை போக்குவரத்து சங்க பொறுப்பாளர் தோழர் சரவணன் கிளை சங்க தலைவர் சரவணன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.        

Tags:    

Similar News