காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
குமாரபாளையத்தில் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.;
காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
குமாரபாளையத்தில் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
தேர்தல் பத்திர விவகாரத்தில் பிரதமர் மோடி, மோசடி செய்ததாகவும், அதற்கு ஸ்டேட் வங்கி துணை போவதாகவும் கூறப்பட்டதால், குமாரபாளையம் ஸ்டேட் வங்கி முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் செல்வகுமார், நகர தலைவர் ஜானகிராமன் தலைமை வகித்தனர்.
ஸ்டேட் வங்கிக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. மாவட்ட தலைவர் செல்வகுமார், இந்த விவகாரம் குறித்து விளக்கி பேசினார். மாவட்ட செயலர்கள் சக்திவேல், பொதுக்குழு உறுப்பினர் சாமிநாதன், நகர செயலர் தாமோதரன், நகர துணை தலைவர் சிவகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
ஆளுநர் ரவியை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
மகாத்மா காந்தியடிகளை இழிவுபடுத்தி பேசிய ஆளுநர் ரவியை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் குமாரபாளையம் நகர காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக பள்ளிபாளையம் பிரிவு சாலையில் நடந்தது.
மாவட்ட தலைவர் செல்வகுமார் தலைமை வகித்தார். காந்தியை இழிவாக பேசிய ஆளுநர் ரவியை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. காங்கிரஸ் ஆட்சி சாதனைகள் குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.
காங்கிரஸ் ஆட்சியில் தொழில் வளம் குறித்தும், தற்போதைய மத்திய அரசின் மக்கள் விரோத செயல்பாட்டால் மக்கள் படும்பாடு குறித்தும் பேசி, இனி வரும் காலங்களில் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைய அதரவு தர வேண்டி கட்சியினர் ஒவ்வொருவரும் பேசும் போது கேட்டுக்கொண்டனர். நிர்வாகிகள் நகர தலைவர் ஜானகிராமன், சுப்ரமணி, சிவகுமார், சாமிநாதன், ராஜேந்திரன், பாலதண்டாயுதம், சுரேஷ் கார்த்திக், கிருஷ்ணன், மனோகரன், கோவிந்தராஜ், உள்பட பலர் பங்கேற்றனர்.