பள்ளிபாளையம் அருகே சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதை எதிர்த்து போராட்டம்

பள்ளிபாளையம் அருகே சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் அரசுக்கு எதிராக கோஷங்கள் போட்டனர்.;

Update: 2023-12-13 03:42 GMT

பள்ளிபாளையம் அருகே ஈக்காட்டூர் பகுதியில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பொக்லினை சிறை பிடித்து போராட்டம் நடத்தினர்.

பள்ளிபாளையம் அருகே ஈக்காட்டூர் பகுதியில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பொக்லினை சிறை பிடித்து பொதுமக்கள் அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

பள்ளிபாளையம் அருகே ஈக்காட்டூர் பகுதியில் 20.34 ஏக்கர் பரப்பளவில், 2.50 ஏக்கரில் அரசு சார்பில் சாயக்கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் மற்றும் குப்பைகளை கொட்டி எரிக்கும் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த இடத்தில் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மூலம் இரண்டாயிரம் ஏக்கரில் நெல், கரும்பு, பயிரிடப்பட்டுள்ளது. இங்கிருந்து 10 மீட்டர் தூரத்தில் மேட்டூர் கிழக்குக்கரை வாய்க்கால், 300 மீட்டரில் மருத்துவமனை உள்ளது.

தெற்கு பாளையம், சின்னக்கவுண்டம்பாளையம், கொள்ளுப்பாளைக்காடு, வெடியரசம்பாளையம், தார்க்காடு உள்ளட சுற்றுப்புற கிராமங்களில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் விவசாயத்தை நம்பி உள்ளனர். இவர்கள் வாய்க்கால் மூலம் பாசன வசதி பெற்று ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெல், கரும்பு பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். விவசாய நிலங்களில் ஆடு, மாடுகள் மேய்த்து அதன் மூலமும் வருமானம் ஈட்டி வருகின்றனர். இந்நிலையில் இந்த இடத்தில் பொக்லைன் இயந்திரம் கொண்டு சமன் படுத்தும் பணி துவங்கியது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் பொக்லின் இயந்திரத்தை சிறைபிடித்து அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இந்த பகுதியில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிடவில்லை என்றால், மிகப்பெரும் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்தனர்.

சுத்திகரிப்பு நிலையம் வந்தால்,நூற்றுக்கும் மேற்பட்ட விவசாய கிணறுகள், 150க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள், மாசடைவதுடன், நிலம், நீர், காற்று மாசடைந்து, புற்றுநோய் , சுவாசக்கோளாறு, தோல் நோய்கள் உள்ளிட்ட பதிப்புகள் ஏற்படும் என அப்பகுதி மக்கள் அஞ்சுகின்றனர்.

Tags:    

Similar News