பள்ளிபாளையம் அருகே கோவிலுக்கு செல்ல தடை: பொதுமக்கள் கொதிப்பு
பள்ளிபாளையம் அருகே கோவிலுக்கு செல்ல தடை விதித்ததால் பொதுமக்கள் கொதித்தெழுந்தனர்.;
பள்ளிபாளையம் அருகே கொக்காராயண்பேட்டை பகுதியில் பிரம்மா லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு அம்மாசிபாளையத்தை சேர்ந்த புதுமணத் தம்பதிகள் தங்களது உறவினர்களுடன் சாமி கும்பிட வந்தனர்.
அப்போது அங்கிருந்த உள்ளூர் நபர் ஒருவர் கோவிலுக்குள் சென்று சாமி கும்பிட அனுமதி இல்லை என்று கூறியுள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதன் வீடியோ வைரலாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. இது சம்பந்தமாக அறநிலையத்துறை அதிகாரிகள் நேரில் வந்து விசாரணை நடத்தினர். ஆனால் ஒரு தரப்பினர் மட்டுமே இருந்ததால் அதிகாரிகளின் விசாரணை நிறைவுபெறாமல் உள்ளது.