மதுவிலக்கு போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்

குமாரபாளையத்தில் திருச்செங்கோடு மதுவிலக்கு போலீசார் அதிரடி வேட்டையில் 8 கிலோ கஞ்சா பறிமுதல். செய்யப்பட்டது.;

Update: 2024-10-10 15:00 GMT

போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் கைது செய்யப்பட்டவர்கள்.

குமாரபாளையத்தில் திருச்செங்கோடு மதுவிலக்கு போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

குமாரபாளையம் அருகே உள்ள கோட்டைமேடு பகுதியில் திருச்செங்கோடு மதுவிலக்கு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த பொழுது, ஸ்கூட்டி வாகனத்தில் வந்த இருவர், போலீசாரைக் கண்டதும் இரண்டு சக்கர வாகனத்தினை திருப்பிச் செல்ல முற்பட்டனர். இதனைக் கண்ட மதுவிலக்கு எஸ்.ஐ. சங்கீதா மற்றும் போலீசார் அவர்களை விரட்டி பிடித்தனர். வாகனத்தில் இருந்த மூட்டையை பிரித்துப் பார்த்த பொழுது, அதில் கஞ்சா 8 கிலோ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், போலீசார் அவர்களை விசாரணை மேற்கொண்ட பொழுது, ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்த பிரபல ரவுடி டேவிட் (வயது27)  என்றும் அவரோடு வந்த பெண் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள ஓலப்பாளையம் பகுதியை சேர்ந்த கௌரி,(25,)  என்பதும் தெரியவந்தது. பின்னர் அவர்களிடம் இருந்த 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன் அவர்கள் எங்கிருந்து கொண்டு வந்தார்கள்? என விசாரித்த பொழுது, ஈரோடு ரயில்வே நிலையத்தில் வட மாநில இளைஞரிடம் இருந்து பெற்று குமாரபாளையத்தில் உள்ள விஜய் என்பவருக்கு விற்பனை செய்ய வந்தது தெரிய வந்தது. வழக்குப்பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், குமாரபாளையம் பகுதியில் தலைமறைவாக உள்ள, கஞ்சா வியாபாரி விஜய் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News