குமாரபாளையத்தில் மாநில அளவிலான கபடி போட்டியில் வென்ற அணிகளுக்கு பரிசு
குமாரபாளையத்தில் மாநில அளவிலான கபடி போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.;
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ராஜமாணிக்கம் நண்பர்கள் குழு சார்பில் மாநில அளவிலான கபாடி போட்டி நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களிலிருந்து 50க்கும் மேற்பட்ட அணியினர் பங்கேற்றனர். துவக்க விழா நிகழ்ச்சிக்கு நகராட்சி கவுன்சிலர்கள் அழகேசன், ஜேம்ஸ் தலைமை வகித்தனர். இந்த போட்டிகளை நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் துவக்கி வைத்தார்.
முதல் பரிசு பெற்ற குமாரபாளையம் ராஜமாணிக்கம் அணியினருக்கு 22 ஆயிரத்து 501 ரூபாய் ரொக்கப்பரிசினை கவுன்சிலர் ஜேம்ஸ், 7 அடி உயர கோப்பையை கவுன்சிலர் அழகேசன் வழங்கி பாராட்டினர். இரண்டாம் பரிசு பெற்ற எஸ்.பி.என் அணிக்கு 17 ஆயிரத்து 501 ரூபாய் ரொக்கப்பரிசினை எம்.கே. பில்டர்ஸ் மணிகண்டன், 6 அடி உயர கோப்பையை மகாத்மா கபாடி கிளப் அணியை சேர்ந்த நாகராஜ் வழங்கி பாராட்டினர்.
மூன்றாம் பரிசு பெற்ற ஸ்போர்ட்ஸ் கிளப் அணிக்கு 12 ஆயிரத்து 501 ரூபாய் ரொக்கப்பரிசினை 2வது வார்டு தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகி அப்பாஸ், 5 அடி உயர கோப்பையை ராஜமாணிக்கம் நண்பர்கள் குழுவினர் வழங்கி பாராட்டினர். நான்காம் பரிசு பெற்ற ஏ.இசட். கன்னியாகுமரி அணிக்கு 7 ஆயிரத்து 501 ரூபாய் ரொக்கப்பரிசினை வி.எஸ்.ஏ. பில்டர்ஸ் விக்னேஷ், சுமதி சந்திரன், 4 அடி உயர கோப்பையை சின்னப்பநாயக்கன்பாளையம் நண்பர்கள் கபாடி குழுவினர் வழங்கி பாராட்டினர்.
சிறந்த ரைடருக்கான பரிசினை பெற்ற ஸ்போர்ட்ஸ் கிளப் வீரர் சண்முகத்திற்கு, குளிர்சாதன பெட்டியை எஸ்.ஆர்.எம். ஸ்வீட்ஸ் மற்றும் ஈரோடு சில்க்ஸ் நிறுவனத்தார் வழங்கி பாராட்டினர். சிறந்த தடுப்பாட்டக்காரர் சிறப்பு பரிசினை பெற்ற ராஜமாணிக்கம் அணி வீரர் சத்தியமூர்த்திக்கு சைக்கிளை தி.மு.க. மாநில தகவல் தொழில் நுட்ப இணை செயலர் செந்தூர் மொபைல்ஸ் சவுந்தர் வழங்கி பாராட்டினார். நிர்வாகிகள் ராஜா, உமாபதி, சுப்பிரமணி, சசிகுமார், மணிகண்டன், ஜெயக்குமார், யுவராஜா, முத்து, சதீஷ்குமார், மேகநாதன் உள்ளிட்ட பலர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.