குமாரபாளையம்; அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு!

குமாரபாளையத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.;

Update: 2024-10-07 02:45 GMT

குமாரபாளையத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. 

அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு

குமாரபாளையத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

அனைத்திந்திய தேவாங்கர் ஸ்ரீ சௌடேஸ்வரி நற்பணி மன்றம் சார்பில் தேவாங்கர் சமுதாயத்தில், அரசு பள்ளியில் பயின்ற அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு வழங்கும் விழா குமாரபாளையம் வட்டாரம் 2 சார்பில் தலைவர் குணசேகரன் தலைமையில் நடந்தது. தலைமை மன்ற ஆலோசகர் மாணிக்கம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

இதில் மாணிக்கம் பேசியதாவது:

மாணவர்கள் நன்கு படித்து, வாழ்வில் முன்னேற வேண்டும். உங்களை படிக்க வைக்க கஷ்டப்படும் பெற்றோர்களுக்கு என்றும் துணையாக இருக்க வேண்டும். எல்லோருக்கும் எப்போதும் நல்லது மட்டுமே செய்யவேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துகொள்ள வேண்டும். நம்மால் நம் வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் வகையில் வாழ வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

45 மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் நடராஜ பெருமாள், சரவணகுமார், பாஸ்கர், ரவிராமகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Similar News