பிரியங்கா காந்தி கைது : குமாரபளையத்தில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

குமாரபாளையத்தில் பிரியங்கா காந்தி கைசெய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2021-10-04 11:00 GMT

பிரியங்கா காந்தி கைது கண்டித்து குமாரபாளையத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உத்திரபிரதேசத்தில்  புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிவரும விவசாயிகள் மீது மத்திய இணை அமைச்சரின் மகன் காரில் மோதியது. இதில் விவசாயிகள் நான்கு பேர் இறந்தனர்.  இது தொடர்பாக நடந்த பிரச்சனையில் போலீசார் துப்பாக்கியால் சுட்டத்தில் நான்கு பேர் இறந்தனர்.

இறந்த விவசாயிகளின் குடும்பத்தாரை சந்திக்க வந்த இந்திய தேசிய காங்கிரஸ் பொது செயலர் பிரியங்காகாந்தி கைது செய்யபட்டார்.

கைது செய்யப்பட்ட  பிரியங்கா காந்தியை விடுதலை செய்யக்கோரி குமாரபாளையம் காங்கிரஸ் சார்பில், நகர தலைவர் ஜானகிராமன் தலைமையில் பள்ளிபாளையம் பிரிவுசாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பிரியங்கா காந்தியை விடுதலை செய்ய வேண்டும் எனவும், கைது செய்ததற்கு கடும் கண்டனம் தெரவித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.. முன்னாள் நகர தலைவர் மோகன்வெங்கட்ராமன், நிர்வாகிகள் தங்கராஜ், சிவராஜ், சுப்பிரமணியம், கோகுல்நாத் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News