தனியார் நிறுவன பஸ் மோதி முதியவர் கவலைக்கிடம்

Bus Accident Today -குமாரபாளையம் அருகே தனியார் நிறுவன பஸ் மோதி முதியவர் கவலைக்கிடமாக இருந்து வருகிறார்.;

Update: 2022-06-16 02:36 GMT

Bus Accident Today - நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பாலக்கரை பகுதியில் வசிப்பவர்கள் பரமசிவம், 75, பங்கஜம், 65, தம்பதியர். இவர்கள் இருவரும் நேற்றுமுன்தினம் இரவு 08:00 மணியளவில் சேலம் கோவை புறவழிச்சாலையில், சாலையை நடந்து கடந்த போது, அவ்வழியே வந்த தனியார் நிறுவன பஸ் வேகமாக வந்து இவர்கள் மீது மோதியது.

இந்த விபத்தில் பங்கஜத்திற்கு லேசான காயமும், பரமசிவம் படுகாயமடைந்து ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து குமாரபாளையம் எஸ்.ஐ. நந்தகுமார் வழக்குப்பதிவு செய்து விசரனைஸ் செய்து வருகிறார்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News