அதி வேகத்தில் வந்த தனியார் கல்லூரி ஓட்டுநருக்கு அபராதம்
குமாரபாளையம் அருகே அதி வேகத்தில் வந்த தனியார் கல்லூரி ஓட்டுநருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.;
அதிவேகமாக வந்த தனியார் கல்லூரி ஓட்டுனருக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.
குமாரபாளையம் அருகே சேலம் கோவை புறவழிச்சாலை கத்தேரி பிரிவு பகுதியில் நேற்று மாலை 5:15 மணியளவில் போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சரி செய்து கொண்டிருந்தனர். அப்போது தனியார் கல்லூரி பேருந்து குமாரபாளையம் வழியாக செல்ல முயற்சித்த போது, போலீசார் நிறுத்த சொல்லியும், அதனை பொருட்படுத்தாமல் அதன் ஓட்டுனர் வேகமாக பேருந்தை இயக்கினார். போக்குவரத்து எஸ்.ஐ. வெங்கடேசன் அந்த பேருந்தை துரத்தி பிடித்து, ஓட்டுனரை இறங்க சொல்லி விசாரணை செய்ததில் கொளத்தூரை சேர்ந்த ரமேஷ், 35, என்பது தெரிய வந்தது. அதி வேகமாக வந்ததிற்கு 400 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்ய மேலதிகாரிகளுக்கு பரிந்துரை செய்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பஸ்ஸில் மாணவ, மாணவியர் நிறைய இருந்தனர். கொளத்தூர் செல்ல வேண்டிய இவர்கள் இந்த சம்பவத்தால் தாமதம் ஏற்பட்டது.