தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர் சம்மேளன மாநில குழு கூட்டம்
குமாரபாளையம் சி.ஐ.டி.யு. தொழிற்சங்க அலுவலகத்தில் சம்மேளன கூட்டம் நடந்தது.;
தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர்
சம்மேளன மாநில குழு கூட்டம்
குமாரபாளையம் சி.ஐ.டி.யு. தொழிற்சங்க அலுவலகத்தில் சம்மேளன கூட்டம் நடந்தது.
குமாரபாளையம் சி.ஐ.டி.யு. தொழிற்சங்க அலுவலகத்தில், தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர் சம்மேளன மாநில குழு கூட்டம் மாநில தலைவர் முத்துசாமி தலைமையில் நடைபெற்றது.
இதில் நிர்வாகிகள் பேசியதாவது:
ஒன்றிய மோடி அரசு தொடர்ந்து மக்கள் விரோத கொள்கைகளை தீவிரமாக அமுலாக்கி வருகிறது .
தாங்க முடியாத விலை உயர்வால் உழைக்கும் மக்கள் பெரும் துயரத்திற்கு உள்ளாகின்றனர். கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளை லாபம் அடிக்கிறார்கள்.
ஏழை ,எளிய மக்கள் பட்டினி கொடுமையால் வாழ முடியாமல் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.
44 தொழிலாளர் சட்டங்கள் நான்கு தொகுப்புகளாக சுருக்கி, தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் சட்டத்தை மோடி அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. கார்ப்பரேட் முதலாளிகளின் கோரிக்கை தொழிலாளர் சட்ட திருத்தம் இதை எதிர்த்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் மே 20 ஆம் தேதி நாடு தழுவிய வேலை நடத்த போராட்டம் நடைபெற உள்ளது .
இதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு பேசினர்.
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் வேலைநிறுத்த மாவட்ட கருத்தரங்கம், மே மாதம் தெருமுனை கூட்டம்,
ஆலை வாயிற் கூட்டம் ,பிரச்சார இயக்கம் போன்றவை நடைபெற உள்ளது. நிறைவாக மே 20ல் நடைபெறும் வேலைநிறுத்தம் மறியல் போராட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள விசைத்தறி தொழிலாளர்களை முழுமையாக பங்கேற்க செய்வது, வீடு வீடாக சென்று வேலைநிறுத்தம் குறித்த நோட்டீஸ் கொடுத்து வேலைநிறுத்த போராட்டத்தை வெற்றியடைய சிறப்பாக செயல்படுவது,
எட்டு மணி நேர வேலை, மாத ஊதியம் 26 ஆயிரம், பென்ஷன், பஞ்சப்படி, ,சட்ட சமூக பாதுகாப்பு கேட்டு விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வு வளம் பெரும் வகையில் தொடர்ந்து இயக்கங்கள் நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது..
இதில் பொதுச்செயலாளர் .சந்திரன், பொருளாளர் அசோகன் உள்ளிட்ட மாநில குழு உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றனர்.
படவிளக்கம் : 27nmksiv02
குமாரபாளையம் சி.ஐ.டி.யு. தொழிற்சங்க அலுவலகத்தில், தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர் சம்மேளன மாநில குழு கூட்டம் மாநில தலைவர் முத்துசாமி தலைமையில் நடைபெற்றது.