மாதாந்திர பராமரிப்பு: ஆனங்கூர் பகுதியில் அக். 22ல் மின் நிறுத்தம்
பள்ளிபாளையம் அருகே ஆனங்கூர் துணை மின் நிலையத்தில், அக். 22ல் மாதாந்திர பராமரிப்பு செய்யவிருப்பதால் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.;
இது பற்றி பள்ளிபாளையம் செயற்பொறியாளர் வாசுதேவன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: பள்ளிபாளையம் அருகே ஆனங்கூர் துணை மின் நிலையத்தில் அக். 22ல் மாதாந்திர பராமரிப்பு செய்யவிருப்பதால் அன்று காலை 09:00 மணி முதல், மாலை 02:00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இதனால் தோக்கவாடி, வரப்பாளையம், கே.எஸ்.ஆர். கல்வி நகர், தச்ச்ங்காட்டுபாளையம், காடச்ச நல்லூர், குப்புச்சிபாளையம், வேலாத்தாகோயில், டி.ஜி.பாளையம், புள்ளிக்கவுண்டம்பாளையம், ஆனங்கூர், சின்ன ஆனங்கூர், பழையப்பாளையம், புளியம்பட்டியான்பாளையம், ஆண்டிக்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.