பல்லக்காபாளையத்தில் அக். 21ம் தேதி மின்சாரம் நிறுத்தம்
மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக, பல்லக்காபாளையத்தில் அக். 21ம் தேதி மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது.
இதுதொடர்பாக, சங்ககிரி மின்வாரிய செயற்பொறியாளர் வரதராஜன் விடுத்துள்ள அறிக்கையில், பல்லக்காபாளையம் துணை மின் நிலையத்தில், மாதாந்திர மின்சார பராமரிப்பு பணிகள், அக். 21ல் நடைபெற உள்ளது. எனவே, அன்றைய தினம் காலை 09:00 மணி முதல், பிற்பகல் 2:00 மணி வரை, வளையக்காரனூர், பல்லக்காபாளையம், ஆலத்தூர், புதுப்பாளையம், எக்ஸல் கல்லூரி ஆகிய பகுதிகளில், மின்சார வினியோகம் இருக்காது என்று தெரிவித்துள்ளார்.