பள்ளிபாளையம் துணை மின்நிலையத்தில் அக்.6 மின் நிறுத்தம்
பள்ளிபாளையம் துணை மின்நிலையத்தில் அக்.6ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின் நிறுத்தம் செய்யப்படும்.
இதுகுறித்து பள்ளிபாளையம் செயற்பொறியாளர் வாசுதேவன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
பள்ளிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக அக். 6 ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை பள்ளிபாளையம், வெடியரசம்பாளையம், வெள்ளிகுட்டை, அண்ணா நகர், காடச்சநல்லூர், தாஜ் நகர், ஆயக்காட்டூர், காவேரி ஆர்.எஸ்., ஒடப்பள்ளி, பாப்பம்பாளையம், கொக்காராயன்பேட்டை, பட்லூர் மற்றும் இறையமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.