குமாரபாளையம் காளியம்மன் திருவிழாவையொட்டி ஆண்கள் வாலிபால் போட்டி

குமாரபாளையம் காளியம்மன் திருவிழாவையொட்டி பவர் பாய்ஸ் சார்பில் ஆண்கள் வாலிபால் போட்டி நடைபெற்றது.;

Update: 2022-03-14 16:30 GMT

குமாரபாளையம் காளியம்மன் திருவிழாவையொட்டி பவர் பாய்ஸ் சார்பில் வாலிபால் போட்டி நடைபெற்றது. 

குமாரபாளையம் காளியம்மன், மாரியம்மன் மாசித் திருவிழாவையொட்டி சுப்பிரமணி நினைவாக பவர் பாய்ஸ் சார்பில் மாவட்ட அளவிலான ஆண்கள் வாலிபால் போட்டி சங்க தலைவர் கணேசன் தலைமையில் நடைபெற்றது.

இதில் பெருமாள் மலை தங்கம் அணியினர் முதல் பரிசும், ஈரோடு லக்காபுரம் 2வது பரிசும், ஒருச்சேரிபுதூர் சதீஸ் பிரண்ட்ஸ் 3வது பரிசும், மல்லசமுத்திரம் மல்லை பாய்ஸ் 4வது பரிசும் பெற்றனர். இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 20 அணியினர் பங்கேற்றனர்.

இதில் சங்க செயலர் கார்த்திகேயன், பொருளர் சுந்தரமூர்த்தி உள்பட பலரும் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags:    

Similar News