குமாரபாளையத்தில் நகராட்சி கடைகள் ஏலம் ஒத்தி வைப்பு
குமாரபாளையம் நகராட்சி கடைகள் ஏலம் ஒத்தி வைக்கப்பட்டது.;
நகராட்சி கடைகள்ஏலம் ஒத்தி வைப்பு
குமாரபாளையம் நகராட்சி கடைகள் ஏலம் ஒத்தி வைக்கப்பட்டது.
குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட கடைகள் உள்ளிட்ட ஆண்டு உரிமை இனங்களுக்கான ஏலம் நேற்று நடப்பதாக இருந்தது. சில தவிர்க்க முடியாத காரணங்கள் காரணமாக நகராட்சி நிர்வாகம் சார்பில் ஒத்தி வைக்கப்படுவதாக கூறப்பட்டது.
இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
குமாரபாளையம் நகராட்சிக்கு சொந்தமான கடை மற்றும் ஆண்டு உரிம இனங்களுக்கான பொது ஏலம் மற்றும் ஒப்பந்தப்புள்ளி செப் . 3, 2024ல் நடைபெறவிருந்ததை நிர்வாக காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பொது ஏலம் நடைபெறும் தேதி பின்னர் தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்திருத்தார்.
இதனால் நகராட்சி அலுவலக வளாகம், தினசரி காய்கறி மார்க்கெட் வளாகம் ஆகிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.