பூலித்தேவன் பிறந்த நாள் மற்றும் உலக கடித தினம்..!
குமாரபாளையத்தில் பூலித்தேவன் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு, உலக கடித தினம் அனுஷ்டிக்கப்பட்டது;
குமாரபாளையம் இல்லம் தேடி கல்வி சார்பில் நடந்த பூலித்தேவன் பிறந்த நாள் விழா மற்றும் உலக கடித நாள் விழாவையொட்டி நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
குமாரபாளையத்தில் பூலித்தேவன் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு, உலக கடித தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
குமாரபாளையம் கலைமகள் வீதியில் நடைபெற்று வரும் இல்லம் தேடி கல்வி மாணவ மாணவிகள் பங்கேற்ற மாவீரன் பூலித்தேவன் பிறந்தநாள் விடியல் ஆரம்பம் சார்பாக அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் கொண்டாடப்பட்டது.
பூலுத்தேவன திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பூலித்தேவன் சாதனை குறித்து மாணவ, மாணவியருக்கு விளக்கமளிக்கப்பட்டது.உ
லக கடிதத் தினமாக நேற்று, தபால் அட்டை மாணவ மாணவிகளுக்கு வழங்கி கடிதம் எழுதும் பயிற்சி வழங்கப்பட்டது. மேலும், மாணவ மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி வைக்கப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தலைமை ஆசிரியை சுகந்தி பரிசு வழங்கினார்.
இல்லம் தேடி தன்னார்வலர்கள் ராணி, சித்ரா, ஜமுனா, தீனா உள்பட பலர் பங்கேற்றனர்.
பூலித்தேவன் (1715–1767) நெற்கட்டான் செவ்வலைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டு வந்த பாளையக்காரராவார். இந்திய விடுதலை வரலாற்றில் வெள்ளையனே வெளியேறு என்று முதன் முதலாக 1755 ஆம் ஆண்டில் வீர முழக்கமிட்டவர்.
இதனால் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும் சிப்பாய்க்கலகத்திற்கும் (1857) முன்னோடியாகக் கருதப்படுகிறார்.
நெற்கட்டாஞ் செவ்வலுக்கு பெருமை என்ன?
நெருப்பாற்றைக் கடந்த பூலித்தேவனாலேஎ
ன்ற நாட்டுப்புற பாடலை கொண்டு இவரின் சிறப்பை அறியலாம்.பூ
ழி நாடு என்பது பாண்டிய நாட்டில் அமைந்த அகநாடுகளுள் ஒன்று. சங்ககாலம் தொட்டே இருந்து பாண்டியர் ஆட்சியின் கீழ் வரும் இந்நாடு 1378ஆம் ஆண்டு சேர நாட்டில் இருந்த ஒரு பாண்டிய மன்னனால் வரகுண ராமன் சிந்தாமணி காத்தப்ப பூழித்தேவர் என்ற தளபதிக்குத் தானமாக வழங்கப்பட்டது.
இவர் ஆப்பநாட்டுக் கொண்டையங் கோட்டை மறவர் வழியில் வந்தவராவார். ஆரம்ப காலத்தில் இதன் தலைநகரம் ஆவுடையாபுரம். நாயக்கர் காலத்தில் (1529–64) பாண்டி நாடு 72 பாளையங்களாக பிரிக்கப்பட்ட போது, பூழி நாட்டின் பகுதிகள் அதனுள் அடங்கின. அதன் பிறகு சில ஆண்டுகள் கழித்து அதன் தலைநகரம் நெற்கட்டாஞ்செவ்வலுக்கு மாற்றப்பட்டது. நாயக்கர் கால வீழ்ச்சியின் போது பாளையங்கள் சுயவுரிமை பெறத்தொடங்கின.வரகுண ராமன் சிந்தாமனி காத்தப்ப பூலித்தேவரின் வழிவந்த பத்தாம் தலைமுறை மன்னனே சித்திர புத்திரத்தேவர் என்றவர் ஆவார்.
: