சி.பி.ஐ. சார்பில் உறுதியேற்பு பொங்கல் விழா..!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் குமாரபாளையம் நகர குழுவின் சார்பாக பொங்கல் விழா கட்சி கொடியேற்று விழா, பெயர் பலகை திறப்பு விழா மற்றும் உறுதியேற்பு விழா நடந்தது.;
சி.பி.ஐ. சார்பில் உறுதியேற்பு பொங்கல் விழா நடந்தது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் குமாரபாளையம் நகர குழுவின் சார்பாக பொங்கல் விழா கட்சி கொடியேற்று விழா, பெயர் பலகை திறப்பு விழா மற்றும் உறுதியேற்பு விழா நடந்தது.
குமாரபாளையம் சி.பி.ஐ. சார்பில் கொடியேற்றுவிழா, பொங்கல் விழா நகர செயலர் கணேஷ்குமார் தலைமையில் நடந்தது. கட்சிக்கொடியினை மாவட்ட குழு உறுப்பினர் மனோகரன் ஏற்றி வைத்தார். மூத்த நிர்வாகிகள் ஈஸ்வரன் ஆறுமுகம் பெயர் பலகையை திறந்து வைத்தனர்.
மாவட்ட குழு உறுப்பினர் மனோகரன் பேசியதாவது:
உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் இனிய தை திருநாள் வாழ்த்துக்கள். தமிழ் மக்களின் தனிச்சிறப்புமிக்க பண்பாட்டு வெளிப்பாடாக கொண்டாடப்படுகிற பொங்கல் திருநாள் சாதி மத வேறுபாடுகள் அனைத்தையும் கடந்து இயற்கையை போற்றுகிற உழைப்பின் உன்னதத்தை உயர்த்திப் பிடிக்கிற சிறப்புமிக்க பண்டிகை ஆகும். இந்த நன்நாளில் மக்கள் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்திட அனைவரும் உறுதியேற்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதையடுத்து உறுதியேற்பு நிகழ்வு நடந்தது. இதில் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் வக்கீல் கார்த்திகேயன், .வடக்கு ஒன்றிய செயலாளர் அர்த்தனாரி, , நகர துனை செயலாளர் விஜய்ஆனந்த், நகர குழு நிர்வாகிகள் கேசவன், சேகர், மணிவேலன், பூபதி, ரவி, கணேசன், செல்வராஜ் மற்றும் பலர் பங்கேற்றனர். பொங்கல் விழா நடத்தப்பட்டு அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.