குமாரபாளையம் தாலுக்கா அலுவலகத்தில் பொங்கல் விழா
குமாரபாளையம் தாலுக்கா அலுவலகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.;
குமாரபாளையம் தாலுக்கா அலுவலகத்தில் தாசில்தார் தமிழரசி தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. புது பானையில் பொங்கலிட்டு கரும்பு, மஞ்சள், தேங்காய், வாழைப்பழங்கள், வெற்றிலை ஆகியன படைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
தாசில்தார் அலுவலகத்தில் உள்ள சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சிவகுமார், துணை தாசில்தார் ரவி, நில அளவை அலுவலர்கள், வட்ட வழங்கல் அலுவலர் வசந்தி, மற்றும் ஆர்.ஐ. விஜய், வி.ஏ.ஒ.-க்கள் முருகன், செந்தில், தியாகராஜன், ஜனார்த்தனன், கோவிந்தசாமி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். அனைவருக்கும் பொங்கல் மற்றும் கரும்பு வழங்கப்பட்டது.