குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்
குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தாசில்தார் தமிழரசி தலைமையில் நகராட்சி திருமண மண்டபத்தில் பயிற்சி முகாம் நடைபெற்றது.;
குமாரபாளையம் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தாசில்தார் தமிழரசி தலைமையில் நகராட்சி திருமண மண்டபத்தில் பயிற்சி முகாம் நடைபெற்றது.
குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தாசில்தார் தமிழரசி தலைமையில் நகராட்சி திருமண மண்டபத்தில் பயிற்சி முகாம் நடைபெற்றது.
இது பற்றி தாசில்தார் தமிழரசி கூறியதாவது: தமிழக அரசால் தேர்தல் பணிகளுக்காக கருடா என்ற புதிய ஆப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை வாக்குச்சாவடி அலுவலர்கள் பயன்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து வாக்குச்சாவடிகள் பற்றிய தகவல்கள் பதியப்பட்டுள்ளன.
எந்த ஒரு வாக்குச்சாவடியில் ஏதேனும் பராமரிப்பு பணி செய்ய வேண்டும் என்றாலும் வாக்குச்சாவடி அலுவலர்கள் இதில் பதிவு செய்ய வேண்டும். உடனுக்குடன் அவை பரிசீலிக்கப்பட்டு குறைகள் நிவர்த்தி செய்யப்படும். வாக்காளர்கள் தங்கள் பெயர்கள் சேர்த்தல், நீக்குதல் போன்ற பணிகளை, வாக்குச்சாவடி அலுவலர்களே செய்து கொள்ளலாம்.
குமாரபாளையம் தொகுதியில் உள்ள 279 வாக்குச்சாவடி மையங்களை சேர்ந்த பி.எல்.ஓ-க்கள் குமாரபாளையத்திலும், பள்ளிபாளையம் நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமிலும் பங்கேற்று புதிய ஆப் குறித்து அறிந்து கொண்டனர். இவ்வாறு அவர் கூறினார். இதில் டி.எஸ்.ஓ. மோகனா, ஆர்.ஐ. விஜய், வி.ஏ.ஒ.க்கள் முருகன், தியாகராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.