பொள்ளாச்சி வழக்கு தீர்ப்புக்கு ஆதரவு தெரிவித்து மக்கள் நீதி மய்யம் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கல்

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்புக்கு ஆதரவு தெரிவித்து குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் சார்பில் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கப்பட்டது.;

Update: 2025-05-13 12:46 GMT

  பொள்ளாச்சி வழக்கு தீர்ப்புக்கு ஆதரவு தெரிவித்து மக்கள் நீதி மய்யம் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கல்

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்புக்கு ஆதரவு தெரிவித்து குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் சார்பில் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கப்பட்டது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கிய தீர்ப்புக்கு ஆதரவு தெரிவித்து, குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் சார்பில், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சித்ரா தலைமையில், பள்ளிபாளையம் பிரிவு சாலையில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இது பற்றி சித்ரா கூறியதாவது:

பொள்ளாச்சி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இதில் சம்பந்தப்பட்ட பெண்கள் பெயர்கள் வெளியில் வராத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நிவாரணம் வழங்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் ஒன்றிய அமைப்பாளர் மல்லிகா, மாவட்ட துணை அமைப்பாளர் சொர்ணாம்பாள், வார்டு செயலர்கள் ரேவதி, வரதராஜ், ஒன்றிய நிர்வாகி தங்கராசு, நற்பணி இயக்க மாவட்ட செயலர் வெங்கடேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.

படவிளக்கம் : 

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்புக்கு ஆதரவு தெரிவித்து குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் சார்பில் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கப்பட்டது.

Similar News