வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் கட்சியினர் ஆறுதல்

குமாரபாளையத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அரசியல் கட்சியினர் ஆறுதல் தெரிவித்தனர்

Update: 2022-08-05 16:45 GMT

தே.மு.தி.க. சார்பில் மாவட்ட துணை செயலர் மகாலிங்கம், நகர செயலர் நாராயணசாமி மற்றும் நிர்வாகிகள் அனைத்து பாதுகாப்பு மையங்களுக்கும் காலை, மாலை வேளைகளில் சென்று டீ, காபி, பன் வழங்கி வருகிறார்கள்.

குமாரபாளையத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு அவர்கள் தங்கியிருந்த பாதுகாப்பு மையங்களுக்கு நேரில் சென்று அரசியல் கட்சியினர் ஆறுதல்  தெரிவித்தனர்.

காவேரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் கரையோர மக்கள் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியும், அன்னதானம் வழங்கியும் வருகிறார்கள். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் தங்கமணி மற்றும் நகர செயலர் பாலசுப்ரமணி ஆதரவாளர்கள், தி.மு.க. நகர செயலர் செல்வம் தலைமையிலான கட்சி நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி  உணவு வழங்கினர். தே.மு.தி.க. சார்பில் மாவட்ட துணை செயலர் மகாலிங்கம், நகர செயலர் நாராயணசாமி மற்றும் நிர்வாகிகள் அனைத்து பாதுகாப்பு மையங்களுக்கும் காலை, மாலை வேளைகளில் சென்று டீ, காபி, பன் வழங்கினர்.



Tags:    

Similar News