மகள் காணாமல் போனதால் தந்தை கால்நடைகளுடன் போலீஸ் நிலையம் முற்றுகை
Girl Missing - மகள் காணாமல் போனதால் தந்தை கால்நடைகளுடன் வெப்படை போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;
Girl Missing -குமாரபாளையம் அருகே எளையாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 43.).விவசாயி. இவரது 19 வயது மகள் ஈரோடு தனியார் கல்லூரியில் பொறியியல் படித்து வரும் நிலையில், ஆக. 24ல் வீட்டை விட்டு வெளியில் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து வெப்படை போலீசில் அதே நாளில் சந்திரசேகரன் புகார் மனு கொடுத்துள்ளார். தற்போது வரை இந்த மனு மீது எவ்வித நடவடிக்கை எடுக்காததால், சந்திரசேகரன் தனது 10 ஆடுகள், 4 மாடுகளுடன் வெப்படை போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டார். போலீசார் அவரிடம் சமாதானம் பேசி அனுப்பி வைத்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2