விநாயகர் சிலைகளை பார்வையிட்ட போலீஸ் எஸ்.பி.

குமாரபாளையத்தில் கொலு வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை மாவட்ட போலீஸ் எஸ்.பி. பார்வையிட்டார்.;

Update: 2024-09-07 15:00 GMT

குமாரபாளையத்தில் கொலு வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை மாவட்ட போலீஸ் எஸ்.பி. பார்வையிட்டு சிலை அமைப்பாளர்களிடம் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அறிவுறுத்தினார்.  

விநாயகர் சிலைகளை பார்வையிட்ட மாவட்ட போலீஸ் எஸ்.பி.

குமாரபாளையத்தில் கொலு வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை மாவட்ட போலீஸ் எஸ்.பி. பார்வையிட்டார்.

நேற்று விநாயகர் சதுர்த்தி நாளையொட்டி குமாரபாளையம் பகுதியில் 31 விநாயகர் சிலைகள் போலீசார் அனுமதியின் பேரில் கொலு வைக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகளை மாவட்ட போலீஸ் எஸ்.பி. ராஜேஷ்கண்ணா நேற்று நேரில் பார்வையிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த வேண்டி, சிலை அமைப்பாளர்கள் மற்றும் போலீசார் வசம் அறிவுறுத்தினார். இரு நாட்கள் முன்பு இன்ஸ்பெக்டர் தவமணி, நேற்றுமுன்தினம் டி.எஸ்.பி.ஆகியோர் சிலை அமைப்பாளர்களை ஒருங்கிணைத்து, ஆலோசனை கூட்டம் நடத்தி விதிமுறைகளை எடுத்துரைத்தனர். சில விநாயகர் சிலைகள் நேற்று இரவு காவிரி ஆற்றில் விஜர்சனம் செய்யப்பட்டது. போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் காவிரி கரையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Similar News